கால்களை இழந்தாலும் தன்னம்பிக் "கை"யை இழக்காத இளைஞர்.. கைகளால் 20 மீ. தூரத்தை 4.78 வினாடிகளில் கடந்து கின்னஸ் சாதனை

0 5005

அமெரிக்காவில் இரு கால்களும் இல்லாத இளைஞர் ஒருவர் தனது கைகளால் அதிவேகமாக ஓடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

ஓஹியோ நகரைச் சேர்ந்த சீயோன் கிளார்க் என்ற 23 வயது இளைஞர் பிறவியிலேயே இரு கால்களும் இல்லாமல் பிறந்தார். ஆனாலும் மனம் தளராமல் உடற்பயிற்சி மேற்கொண்ட அவர் மல்யுத்தம் மற்றும் சக்கர நாற்காலி பந்தயம் உள்ளிட்ட பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் கைகளால் வேகமாக ஓடி ரெனால்ட்ஸ் என்பவரின் சாதனையை கிளார்க் முறியடித்துள்ளார்.

20 மீட்டர் தூரத்தை 4 புள்ளி 78 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்துள்ளார் சீயோன் கிளார்க்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments